காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் கிரிமி நாசினி இயந்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2020 03:06
காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வரபகவான் கோவில் திறப்பதை முன்னிட்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி இயந்திரம் கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ் முன்னிலையில் வைக்கப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் முலம் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த 65 நாட்களாக கோவில் நடை அடைக்கப்பட்டது.தினம் கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கோவில்கள் வரும் 8-ம் தேதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதனால் கோவிலில் அனைத்து பகுதியையும் சுத்தம் செய்யும் பணி மற்றும் கிருமி நாசினியாக மருந்துகள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் விரைவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களின் சுகாதாரத்தை பேணிகாக்க ஏதுவாக கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய திருச்சியில் தனியார் நிறுவன உதவியுடன் கிருமிகள் நாசினி இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று கோவில் ராஜகோபுர வாசலில் முன்பு கோவில் நிர்வாக அதிகாரி ஆதாஷ்.கோவில் கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்களுக்கும் கைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.