திருப்பூர் கோவில்கள் திறப்பு எப்போது? காத்திருக்கும் பூ வியாபாரிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2020 03:06
திருப்பூர் கோவில்கள் எப்போது திறக்கப்படும், திருமண நிகழ்ச்சிகள் இயல்பு நிலைக்கு எப்போது மாறும்? என பூ வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கொரோனா ஊரடங்கால், திருப்பூர், தென்னம்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட பூ மார்க்கெட் இரு மாதங்களாக சரிவர செயல்படவில்லை. மே இறுதி வாரம் முதல் ஒரு டன் பூக்கள் மட்டும் வந்தது. பெயரளவுக்கு விற்பனை நடந்தது.பஸ் போக்குவரத்து துவங்கியதால், வெளிமாவட்டங்களில் இருந்து பூக்கள் வரத்து அதிகரித்து மூன்று டன் பூக்கள் வருகிறது. ஆனால், மார்க்கெட்டில் விற்பனை குறைவாக உள்ளது.பூ வியாபாரிகள் கூறுகையில்,திருமண நிகழ்வுகள் சகஜமாக நடக்காமல், குறைந்தளவு நபர்களுடன் நடப்பதால் பூக்கள் வாங்குவது அதிகரிக்கவில்லை. கோவில்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தால் மட்டுமே பூ விற்பனை களைகட்டும். இல்லாவிடில், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான், என்று ஆதங்கப்பட்டனர்.