நாகை: சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான திருவெண்ணீற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் தனி சன்னதியில் திருமணக் கோலத்தில் திருஞானசம் பந்தர், திருதோத்திர பூர்ணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். நிகழாண்டு பொது முடக்கத்தால் பக்தர்கள் யாரும் அனுமதியின்றி எளிமையாக திருக்கல்யாணம் நடைபெற்றது .முன்னதாக வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் நடத்தி திருமண சடங்குகள் நடந்தன .பின்னர் சிவாச்சாரியர்கள் திருமாங்கல்யத்தை அணிவித்து திருஞானசம்பர் தர் திருக்கல்யாணம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நேற்று நள்ளிரவு நடந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை சிவஜோதி தரிசனம் நடந்தது . எளிமையாக நடந்த இவ்விழாவில் சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர் .அவ்வூர் பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே விடிய , விடிய கண் விழித்து வழிபாடு செய்தனர்.