பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
02:06
புதுச்சேரி : புதுச்சேரியில் 76 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுதலங்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து பரவசத்துடன் வழிபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வழிபாட்டுதலங்கள் 8ம் தேதி முதல் திறக்கலாம் என மாநில அரசு அனுமதி வழங்கியது. இதன்படி 76 நாட்களுக்கு பிறகு நேற்று புதுச்சேரியில் கோவில்கள், தேவலாயங்கள், பள்ளி வாசல்கள் திறக்கப்பட்டன.இந்து அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ள மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், கருவடிக்குப்பம் சித்தானந்தா உட்பட மாநிலம் முழுவதும் 243 கோவில்களும் திறக்கப்பட்டன.மூலவர் தரிசனம்கோவில்கள் காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டதும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வந்த பக்தர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் கிருமிநாசினியால் கைகள் சுத்தம் செய்து, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், அவர்களின் முழு விபரங்கள் பதிவு செய்த பின், ஒவ்வொருவராக மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முதியவர்கள், குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சனை, பூஜை அனுமதிக்கவில்லை.இதேபோன்று தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டு சமூக இடைவௌியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர்.கலெக்டர் ஆய்வுவழிபாட்டு தலங்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் அருண், டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் நேற்று மணக்குள விநாயகர் கோவிலில் ஆய்வு செய்தனர்.