குருவாயூரில் கிருஷ்ணரை கண்குளிர கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2020 10:06
பாலக்காடு: 80 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணரை கண்குளிர கண்டு கரிசித்து ஆசி பெறுவதற்காக பக்தர்கள் குருவாயூர் கோவில் சன்னிதியில் எத்தினர்.
கொரோனா நோய் பரவலை தடுப்பதின் ஒருபகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்தனர். இதையொட்டி அனைத்து புனித மையங்களும் மூட அரசு உத்தரவிட்டிருந்தனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலும் மூடப்பட்டன. இந்தநிலையில் கடந்த தினம் ஊரடங்கு சில தளர்வுகளை ஏற்படுத்தி விதிமுறைகளின் அடிப்படையில் புனித மையங்கள் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து நேற்று அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் திறந்தனர்.
ஆன்-லைன் வழி புக் செய்து கால அட்டவணை அனுசரித்து பக்தர்கள் குருவாயூர் கோவில் சன்னிதிக்கு வந்தனர். காலை 9:15 மணி அளவில் 13 பேரடங்கும் முதல் பக்தர்கள் கோவில் சன்னிதியினுள் நுழைய விட்டனர். கிழக்கு கோபுர வாசலில் பெரிய நடை பந்தலில் தரிசனத்திற்காக வந்த பக்தர்களுக்கு முதலில் சனிடைசர் அளித்தனர். தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த பிறகு உடல் வெப்பம் பரிசோதனை நடத்தினர். மீண்டும் சனிடைசர் அளித்த பிறகு வரிசையில் நிற்க அனுமதித்தனர். சிற்றம்பலத்தின் உள்ளே 5 பேர் வீதம் நுழைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொடிமரத்தின் அருகில் நின்று மூலவரே கண்குளிரக் கண்டு வணங்கினர். தொடர்ந்து தெற்குக்கு கோபுர நடை வழி ஐயப்பன் கோவில் வழி வெளியே வந்து மேற்கு கோபுர நடை வழியும் பகவதி கோவில் வழியும் பக்தர்களை வெளியே அனுப்பினர். 284 பேர் ஆன்லைன் புக் செய்திருந்தாலும் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தனர். நேற்று 88 பக்தர்கள் தரிசனம் நடத்தினர். ஐ.ஜி., சுரேந்திரன், கமிஷனர் ஆதித்யா, ஏ.சி.பி, பிஜு பாஸ்கர் ஆகியோரின் தலைமையில் போலீசார் குருவாயூர் கோவிலில் கட்டுப்பாடுகளை கண்காணித்தனர். கோவில் தேவஸ்தான தலைவர் மோகன்தாஸ் தலைமையிலான நிர்வாகம் குழு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.