உடுமலை:உடுமலை அருகே குறிஞ்சேரியில் தலைகொண்டம்மன் கோவில் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புகளால், கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுவாமிகளுக்கான திருவிழாக்களும், கொண்டாடப்படவில்லை.
குறிஞ்சேரி தலைகொண்டம்மன் திருக்கல்யாண உற்சவமும் பக்தர்கள் இல்லாமல் சிறப்பு பூஜைகளுடன் மட்டுமே நடந்தன. திருக்கல்யாணத்தையொட்டி, அம்பாளுக்கு பால், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. பச்சை நிற பட்டுடுத்தி, சிறப்பு அலங்காரத்துடன் அம்பாளுக்கும் சூலத்தேவர் சுவாமிகளுக்கும், மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாணம் நடந்தது. சுவாமிகளுக்கு, மங்கல கயிறு, முளைப்பாரி மற்றும் மங்கல பொருட்கள் படைத்து வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தலைகொண்டம்மனுக்கு தீபாராதனை நடந்தது. உற்சவத்தையொட்டி, கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.