பதிவு செய்த நாள்
12
மே
2012
11:05
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், பக்தர்கள் வெயிலில் நடந்து செல்ல வசதியாக, தரை விரிப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. வெளி நாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தினமும் தரிசனம் செய்கின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கத்தரி வெயிலால், கோவிலின் வெளி பிரகாரத்தில் கருங்கற்கள் சூடாகி விடுகின்றன. இதனால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதை கருத்தில்கொண்டு, கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், பக்தர்கள் வசதிக்காக, கீழ வீதி கோபுரத்தில் இருந்து, கோவிலின் உள்ளே செல்லும் இடம் வரை, தரை விரிப்பு போடப்பட்டுள்ளது.