காரைக்கால் பள்ளிவாசல்களில் சமூக இடைவெளிவிட்டு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2020 02:06
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாசல்களின் சமூக இடைவெளி விட்டு தொழுக வேண்டும் என்று வக்ஃபு நிர்வாக சபை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயால் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் தற்போது ஜூம்ஆத் தொழுகை நடைபெற்று வருகிறது. மேலும் அமைதியாகவும் சமுதாய மீது அரசு கொண்ட நம்பிக்கை காக்கும் வகையில் சமுக இடைவெளி விட்டு தொழுவது மட்டும் அல்ல நமது கண்ணியத்தை பாதுகாக்கும் விதமாக நடக்க வேண்டும்.கூட்ட நெருக்கடியை தவிர்க்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள பெரியப்பள்ளி. ஹிலுருப்பள்ளி. முஹயித்தீன்பள்ளியில் இரண்டாவது ஜும்ஆத் நடைபெறும். எனவே அனைவரும் அமைதி காத்து ஆதரவு வழங்க வேண்டும். மேலும் முதல் ஜும்ஆத் 12.30 மணிக்கு தொடங்கி 1.10மணிக்கு முடியும் ஜமாத்தார்கள் வரிசையாக வெளியேற வேண்டும். மேலும் ஜும்ஆத் 1.30 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்கு முடியும். எனவே ஜமாத்தார்கள் நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சிறுவர்களை அழைத்து வருவது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வக்ஃபு நிர்வாக சபையினர் செய்தி குறிப்பில் கூறியுள்ளது.