அழகர்கோவில் தெப்பம் புதுப்பிப்பு: தினமலர் செய்தி எதிரொலி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 10:05
அழகர்கோவில்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், அழகர்கோயில் நாராயணன்வாவி தெப்பத்தை கோயில் நிர்வாகத்தினர் புதுப்பித்தனர். அழகர்கோயில் மலை மீது நூபுரகங்கை தீர்த்தம் உள்ளது. மழை காலத்தில் இங்குள்ள தண்ணீர், அடிவாரத்தில் உள்ள ஆராமத்து கண்மாய் மற்றும் 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி எதிரே உள்ள தெப்பத்திற்கு வந்து சேரும்படி வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. அங்கிருந்த மன்னர் திருமலை நாயக்கர் மகாலை இடித்து தெப்பத்தில் கொட்டி மூடிவிட்டனர். இதுபற்றிய செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. தெப்பம் தூர்வாரப்பட்டு, சுற்றிலும் படிகள் அமைக்கப்பட்டன.அதேபோல் கோயில் கோட்டை சுவருக்கு வடக்குப் பகுதியில் நாராயணன்வாவி என்ற தெப்பக்குளம் உள்ளது. மழை நீரும் வர வழியில்லை. ஆனால் மழை காலத்தில் வறண்டும், கோடையில் நீர் நிறைந்தும் "அதிசய தெப்பமாக விளங்கியது.