பதிவு செய்த நாள்
27
ஜூன்
2020
10:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், பக்தர்கள், 59.67 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், கடந்த மார்ச் மாதம், 21ம் தேதி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. ஆனால், தினசரி மூலவருக்கு நடத்தப்படும் நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், மார்ச் மாத உண்டியல் காணிக்கை, 116 நாட்களுக்கு பின், கோவில் ஊழியர்கள் உண்டியல் திறந்து எண்ணினர்.இதில், 59 லட்சத்து, 67 ஆயிரத்து, 759 ரூபாய் ரொக்கம், 468 கிராம் தங்கம், 3210 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.