வில்லியனுார் : வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேர்திருவிழா கொரோனா தொற்று பரவலால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 5ம் தேதி நடை பெற இருந்தது.புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்து சமய அறநியைத்துறை ஆணையின்படி வரும் 5ம் தேதி நடைபெற இருந்த பிரம்மோற்சவ தேர் திருவிழா ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.