ஏர்வாடி தர்காவில் பச்சைத் துண்டு வைத்து பக்தர்களிடம் பணம் பறிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2012 11:05
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவிற்கு வரும் பக்தர்களிடம், சிலர் கட்டாயப்படுத்தி, பணம் பறித்து வருவதாக, தர்கா நிர்வாகம் ராமசுப்பிரமணி டி.ஐ.ஜியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. கீழக்கரையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஏர்வாடி தர்கா ஹக்தார் அம்சத்ஹூசைன், டி.ஐ.ஜி.,யிடம் அளித்த புகார்: ஏர்வாடி தர்கா அடக்க ஸ்தலத்திற்கு வரும் பக்தர்களை வழிமறித்து, பச்சை துணியை தலையில் வைத்து கட்டாயப்படுத்தி பணம் பறித்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கடைகளை வைத்துள்ளதால், இடையூறு ஏற்படுகிறது. ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசலில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கோரினார். டி.ஐ.ஜி., கூறுகையில், அடக்க ஸ்தலத்திற்கு வெளியே கேமரா பொருத்தவும், ஏர்வாடியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.