கிருபாபுரீஸ்வரர் கோவில் தேர் மேடையில் சுகாதார சீர்கேடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2020 03:07
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவில் தேர் ஜோடிப்பு மேடையில் சாணம் கொட்டி எருமுட்டை தட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுாரில் இந்து அறநிலைத்துறை கட்டுபாட்டில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இக்கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு அருகாமையில் தேர் ஜோடிப்பு மேடை அமைக்கப்பட்டு திருவிழாக் காலங்களில் சாமி ஜோடிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். அதனில் அப்பகுதியில் உள்ள சிலர் சாணம் தட்டியும், மாடுகளை கட்டியும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.இது மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு சாணத்தில் பூச்சி மருந்து தெளித்து எருமுட்டை தட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக குறிப்பிடத்தக்கது.எனவே, தேர் ஜோடிப்பு மேடையை சரி செய்து வேலி அமைக்க இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.