பதிவு செய்த நாள்
01
ஜூலை
2020
05:07
கேட்கிறார் விஜயேந்திரர்
* காலங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் பின்பற்றும் அடிப்படை தர்மங்களான பக்தி, ஒழுக்கம், நீதி, நியாயம் போன்றவை எப்போதும் மாறாதவை.
* அக்கால மன்னர்கள் தர்ம கைங்கர்யத்தை உருவாக்கும் போது, வருங்காலத் தலைமுறையினரும் அதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நிவந்தங்களை (இறையிலி நிலங்கள்) ஏற்படுத்தி வைத்தனர்.
* தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அந்த தர்மமே ஒருவனைக் காப்பாற்றும். தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்து வருவான்.
* பெண்கள் எங்கு நிம்மதியுடன் வாழ்கிறார்களோ அந்த நாடே பாதுகாப்பாக இருக்கிறது என்பது பொருள்.
* ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடும், அவரது படைப்புகளும் நம் நாட்டின் ஒற்றுமைக்கு துணைபுரிகின்றன. மொழி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அவரது ஸ்தோத்திரங்களைப் பாடி கடவுளை வழிபடுகின்றனர்.
* தான் வளர்வதோடு சமுதாயத்தையும் வளர்ப்பதில் மனிதன் விருப்பம் கொண்டிருக்க வேண்டும்.
* பாரத தர்மம், பாரம்பரியம், குடும்பம், கிராமம் போன்ற அடிப்படை விஷயங்களை போற்றினால் நம் சம்பிரதாயம், நம் நாடு என்றென்றும் நிலைக்கும்.
* மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற தர்மத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பூமியாக தமிழகம் திகழ்கிறது. வேத பூமியாகவும், தர்ம பூமியாகவும், நாகரிக பூமியாகவும் இது விளங்குகிறது.
* வெளி மாநிலம், வெளி நாடு என்று எங்கு வாழ்ந்தாலும் பண்பாட்டை நாம் மறக்கக் கூடாது. நாம சங்கீர்த்தனம், பஜனை, கோயில் வழிபாட்டை விருப்பத்துடன் பின்பற்ற வேண்டும்.
* மனிதனுக்கு தனிப்பட்ட வாழ்வில் திருப்தியும், சேவை செய்வதில் உற்சாகமும் இருப்பது அவசியம்.
* பக்தி என்னும் ஒளி உலகெங்கும் பரவ வேண்டும். எல்லா உள்ளங்களிலும், இல்லங்களிலும் பக்தி மணம் கமழ வேண்டும்.