திருக்கோவிலூர் முருகன் கோவில் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2020 11:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பழமையான முருகன் கோவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் திறக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டது.
திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ளஸ்ரீ பாலசுப்ரமணியர் கோவில் நிர்வாக சிக்கல் காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் பரிந்துரையின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி கோவிலை திறக்க முடிவு செய்தனர். இதன்படி இந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில், செயல் அலுவலர் அருள் முன்னிலையில், கோவில் பக்தர்கள் பங்கேற்க மூலஸ்தானம் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு திருப்பணிக்கான பணிகள் துவங்கப்பட்டது.