பதிவு செய்த நாள்
04
ஜூலை
2020
02:07
திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று, உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழங்கள், சந்தனம், மஞ்சளால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின், ஹோமம் வளர்த்து புண்ணியாசனம் செய்யப்பட்டது. மகாபூர்ணாஹுதி முடித்து, கவசங்களுக்கு பூஜை செய்து, உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின், பட்டாடைகள், தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரித்து, தீப, துாப நைவேத்தியம் சாத்தினர். மாலையில் உற்சவ மூர்த்திகள் தங்கக் கவசத்துடன் விமான பிரகாரத்தில் வீதியுலா வந்தனர். இதில், திருமலை மடத்தின் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.