நெல்லை அருகே ஓடை சீரமைப்பில் சிலை, தொல்லியல் பொருட்கள் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2020 02:07
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே ஓடை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பழமையான சிலை, தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.
திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் மருக்காலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் நுாறு நாள் வேலையின் கீழ் ரோட்டோர ஓடை சீரமைக்கும் பணி நடந்தது. மண்ணை தோண்டியபோது தலையலங்காரத்துடன் கூடி அம்மன் கற்சிலையின் தலைப்பகுதி கிடைத்தது. அதே பகுதியில் கல்தொட்டி, முதுமக்கள் தாழியின் மேல் ஓடுகள் ஆகியனவும் கிடந்தன. பின்னர் அவை வீரகேரளம்புதுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது, ஊத்துமலை ஜமீன் பகுதியான அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால் அவற்றின் காலம், தொல்லியல்தன்மை தெரியவரும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.