கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மேலக்கொடுமலுாரை சேர்ந்த விவசாயி கோபால் 58. இவரது நிலத்தில் பண்ணை குட்டை அமைக்க தோண்டும்போது 3 முதுமக்கள் தாழி, ஓடுகள், வளையங்கள், இரும்பு தாதுக்கள் கிடைத்தன. கமுதி வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.