சூலூர்: ங்கா இடத்தில் கோவில் கட்டும் பணிக்கு எதிர்ப்பு எழுந்ததால் நிறுத்தப்பட்டது. அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பல்லவா நகரில், பூங்காவுக்குரிய இடத்தில் கோவில் கட்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு தரப்பினர், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதற்கு மற்றோரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டது.