ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 26ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2020 10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஜூலை 26ல் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் நடக்க உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
ராமேஸ்வரம் கோயிலில் தை, மாசி, ஆடித் திருவிழாக்கள் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜூலை 15ல் கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் ஆடித் திருக்கல்யாண விழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 17 நாட்கள் விழா நடக்க உள்ளது. ஜூலை 20ல் ஆடி அமாவாசை, 23ல் ஆடித்தேரோட்டம், 25ல் ஆடித்தபசு, 26ல் திருக்கல்யாண விழாக்கள் நடக்கின்றன. ஊரடங்கால் இவ்விழாக்கள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடத்தப்பட்டு, ‘இணையதளம்’ மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.