சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2020 11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடிஅமாவாசை விழாவிற்கு அனுமதிக்கபடுவோமா என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இங்கு வெகுசிறப்புடன் நடக்கும் ஆடிஅமாவாசை விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் , வெளிமாநில பக்தர்கள் என லட்சம் பேர் தரிசனம் செய்ய வருவர். ஜூலை 20 ல் ஆடிஅமாவாசை வருகிறது. ஊரடங்கால் திருவிழாவில் அனுமதிக்கபடுவோமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலுக்கு காத்திருப்பதாக செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.