Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் 2200ம் ஆண்டுகளுக்கு ... மொட்டை அடிப்பவர்களுக்கு நிவாரணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் கால கல்வெட்டு மேல்மலையனுாரில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
10:07

 செஞ்சி : மேல்மலையனுாரில் ராஜ நாராயண பெருமாள் கோவிலில் பாண்டியர் கால கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுாரில் உள்ள ராஜ நாராயண பெருமாள் கோவிலில் விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் தலைமையில், பொறியாளர் பிரகாஷ், வரலாற்று மாணவர் அசோக் ராஜ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இதில் பாண்டியர்கால கல்வெட்டு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.இது குறித்துமுனைவர் ரமேஷ்கூறியதாவது. மேல்மலையனூரில் உள்ள ராஜ நாராயண பெருமாள் கோவிலில் நடத்திய ஆய்வில் கோவிலின் தென்புறஅதிட்டானத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது.இந்த கல்வெட்டு மூன்றாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 30 ஆவது ஆட்சியாண்டில் கி.பி., 1298 இல் பொறிக்கப்பட்டுள்ளது.சோழர் ஆட்சி முடிந்து பாண்டியர் ஆட்சி வந்த போது பெருமாள் கோவில் கட்டப்பட்டதையும், இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில், பல்குன்றக் கோட்டத்தில் உத்தம சோழ வளநாட்டில், சிங்கபுர நாட்டில் மலையனூர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராஜேந்திரசோழ நல்லூர் என்ற பெயரும் இவ்வூருக்கு இருந்தது கல்வெட்டின் மூலம் தெரிகிறது. மேல்மலையனுாரை சேர்ந்த மாடமுடையான் காமன் பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர் கோவிலை கட்டியதை கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். சிங்கபுரம் என்பது செஞ்சிக்கு அருகே உள்ள சிங்கவரம் என்று ஊரை குறிக்கிறது.கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோவில் கட்டப்பட்டதையும், அக்காலத்தில் இருந்த நாட்டுப் பிரிவுகள் பற்றியும் அறிய முடிகிறது. சோழர், பாண்டியர் காலம் முதல் தற்போது வரை மலையனூர் என்ற பெயர் மாறாமல் ஆயிரம் ஆண்டுகளாக அதே பெயரில் அழைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar