பஞ்ச குரு ஸ்தலங்களில் 17ல் குரு பெயர்ச்சி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 10:05
பேட்டை : நெல்லை மாவட்ட பஞ்ச குரு ஸ்தல கோயில்களில் 17ம்தேதி குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது. நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர், இடைகால் (தென் திருவாரூர்), தென் திருபுவனம் பஞ்ச குரு ஸ்தலங்கள் உள்ளன. இங்குள்ள கோயில்களில் தட்சிணாமூர்த்தி திருவுருவங்கள் மாறுபட்ட நிலைகளில் அமைந்திருப்பது சிறப்பு. 17ம்தேதி வியாழன் சரவீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்திற்கு பெயர்ச்சி அடைகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தென் திருபுவனம் புஷ்பவனநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி கால் மாற்றி அமர்ந்து சிவஞான போத தட்சிணாமூர்த்தியாக காட்சியளிக்கிறார். அங்கு குரு பெயர்ச்சி நாளில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், ஹோமங்கள், இலவச அர்ச்சனை நடக்கிறது. ஆட்சி அதிகாரம், கல்வி ஆளுமைத்திறன், திருமணத்தடை நீக்கத்தை அருள வல்லவர் வியாழ குரு. குரு பெயர்ச்சி நாளில் மனம் ஒன்றி இறைவழிபாட்டில் ஈடுபட்டால் பலன் உண்டு என்கின்றனர் ஆன்மீக பெருமக்கள்.