பதிவு செய்த நாள்
15
மே
2012
10:05
கீழக்கரை: மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரஸ்வதி முயற்சியில் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அருகே ரூ.5.50 லட்சத்தில் "ஹைமாஸ் விளக்கு சுட÷ரட்டு விழாவில் மாயாகுளம் ஊராட்சிஅ.தி.மு.க.,செயலாளர் பாக்கியநாதன் வரவேற்றார். மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ஆணிமுத்து தலைமையில், அமைச்சர் சுந்தரராஜ் துவக்கி வைத்து பேசுகையில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வடக்கு, தெற்கு கோபுரங்கள் ஒரு கோடி ரூபாயில் புனரமைக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது, என்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் சேகர், சட்டசபை தொகுதி செயலாளர் முருகேசன், ஒன்றிய தலைவர்கள் ராஜேஸ்வரி(திருப்புல்லாணி), ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் முனியாண்டி (திருப்புல்லாணி), தர்மர் (முதுகுளத்தூர்). முத்தையா(பரமக்குடி), திருப்புல்லாணி ஒன்றிய துணை தலைவர் குருசாமி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் சரஸ்வதி, உத்தரகோசமங்கை ஊராட்சி தலைவர் நாகராஜன், பங்கேற்றனர். தங்கராஜ் நன்றி கூறினார்.