கைலாசம் சென்ற ஆதிசங்கரருக்கு பார்வதி மூலம் ஒரு கட்டு சுவடிகள் கிடைத்தன. அதில் பார்வதியின் அழகை வர்ணிக்கும் 100 ஸ்லோகங்கள் இருந்தன. தன்வசம் சுவடிகள் இருக்க வேண்டும் என விரும்பிய நந்தீஸ்வரர் அதைப் பறிக்க முயன்றார். அப்போது பாதிக்கு மேல் அதாவது 59 ஸ்லோகங்கள் அவரது கைக்கு வந்தன. மீதம் 41 ஸ்லோகங்கள் மட்டும் சங்கரரிடம் இருந்தன. இதையறிந்த பார்வதி,‘‘“கவலைப்படாதே சங்கரா... விடுபட்ட ஸ்லோகங்களை நீயே பாடு’’ என்று வேண்டுகோள் விடுத்தாள். சங்கரரும் ஏற்று முழுமையாக பாடி முடித்தார். இதிலுள்ள முதல் 41 ஸ்லோகம் ‘ஆனந்த லஹரி’ என்றும், சங்கரர் பாடிய 59 ஸ்லோகம் ‘சவுந்தர்ய லஹரி’ என்றும் அழைக்கப்படுகிறது.