விக்ரமனுக்கு ஒரு விண்ணப்பம் விஷ்ணு பக்தரான ஆளவந்தார், திரிவிக்ரம மூர்த்தியே! மீண்டும் ஒருமுறை உன் திருவடியை என் தலையில் வைப் பாயா? என்று கேட்டார். மீண்டும் ஒருமுறை என்கிறீரே! இதற்கு முன் எப்போது உன் மீது வைத்தேன்?, என்று எதிர்கேள்வி கேட்டார் பெருமாள். திரிவிக்ரமனாக வந்தபோது திருவடியால் உலகை அளந்தீர். நீரும், கடலும், வானும், மலையும் ஒருசேர அளந்தபோது உம் திருவடி படாத இடமே உலகத்தில் இல்லை. ஆனால், அப்போது அடியேன் கல்லாக இருந்தேனோ? மண்ணாக இருந்தேனோ? உம் திருவடியின் அருமை தெரியாமல் இ ருந்து விட்டேன். ஆச்சாரியார்களின் அருளால் இப்போது உம் பெருமையை உணர்ந்து விட்டேன். மறுபடியும் ஒருமுறை என் சிரம் மீது பாதம் வைத்தால் திருவடியில் பதிந்திருக்கும் சங்கு, சக்கர, அங்குச, துவஜ ரேகைகள் பட்டு நற்கதி பெறுவேன், என்று வேண்டுகோள் விடுக்கிறார்.