புதுச்சேரி; புதுச்சேரி அண்ணா சாலை, 45 அடி சாலை சந்திப்பில் உள்ளது சாலை விநாயகர் கோவில்.இக்கோவிலின் உண்டியல் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் வரும் மர்ம நபர்கள், கோவில் முன் ஆட்டோவை நிறுத்துகின்றனர்.ஆட்டோவில் இருந்து இறங்கிய 25 வயது மதிக்க தக்க வாலிபர், கோவில் உண்டியலை துாக்கி கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பித்துச் செல்கின்றனர். உண்டியல் திருடிச் செல்லும் காட்சிகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.