தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் சனி பிரதோஷம் பக்தர்கள் இன்றி சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் மகா சனி பிரதோசத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. சனி பிரதோஷம் என்றால், நந்தியம் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை காண, நந்தி மண்டபம் முன்பு குவிந்து இருக்கும் பக்தர்கள் கூட்டம் கொரோனா தொற்றால் வெறிச்சோடி காட்சியளிக்கிறது. கொரோனா தொற்று விரைவில் ஒழிந்து மீண்டும் சனி பிரதோஷத்தில் மன மகிழ்ச்சியை நந்தியம் பெருமானை தரிசிக்க தொடர்ந்து பிராத்திப்போம்.