மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனத்தில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகான ஏற்பாடு தடை செய்யப்பட்டு நந்தவன வாளகம் மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள நந்தவனம் காசிக்கு அடுத்தாற்போல் புகழ் பெற்றது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவை திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கோத்தகிரி ஊட்டி கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களது முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதியை இங்கு செய்து வருகின்றனர். இந்நிலை ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் திரளாக நந்தவனத்தில் வந்த கொண்டு இருக்கும். பொதுமக்களுக்கு திதி செய்ய 50 மேற்பட்ட பிராமணர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட திதி செய்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 4 மாத காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அரசங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளது.இதனால் ஆடி அமாவாசையான இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சிகான ஏற்பாடு தடை செய்யப்பட்டு நந்தவன வாளகம் மூடப்பட்டுள்ளது.