ஆடி அமாவாசையை முன்னிட்டு, பழநி சண்முகநதிக்கரையில் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி, எள்ளு, பச்சரிசி படையல் வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். ஊரடங்கால் ஆற்றங்கரையில் வழிபாட்டுக்கு நேற்று அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே முன்னோர் வழிபாடு நடத்தினர்.
ஆர்வமான பக்தர்கள்: நேற்று அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர். கோயிலுக்கு வேளியே இருந்த தீபத் துாணில் மோட்ச தீபம் ஏற்றினர். அவர்களை நிலக்கோட்டை போலீசார் கண்டித்து திருப்பி அனுப்பினர்.தடை மீறிய பக்தர்கள்ஆத்துார் அக்கரைப்பட்டி அருகே மலைக்குன்றில் சடையாண்டி சுவாமி குகைக்கோயில் உள்ளது. போலீசார் சோதனைச்சாவடி அமைத்திருந்த போதும், ஆடுமேய்க்க தோட்டங்களுக்கு செல்வதாகக்கூறி பலர் தனித்தனியே சென்றனர். சிலர் புதர்ச்செடிகளின் இடையே, தவழ்ந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். காது குத்துதல், முடிகாணிக்கை போன்ற நேர்த்திக்கடன்களை பலர் செலுத்தினர்.