பதிவு செய்த நாள்
15
மே
2012
11:05
நாமக்கல்: நாமக்கல் ராஜகணபதி கோவிலில், வரும் 17ம் தேதி குரு பெயர்ச்சி மகாயாக பூஜை நடக்க உள்ளது.நாமக்கல்-திருச்சி சாலையில், ராஜகணபதி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், வரும் 17ம் தேதி குரு பெயர்ச்சி மகாயாக பூஜை நடக்க உள்ளது. அதை முன்னிட்டு அன்று மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு மேல் பூர்ணாஹூதி தீபாராதனை, 6 மணிக்கு ஸ்ரீ ராஜகணபதிக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனை நடக்க உள்ளது.தொடர்ந்து, 6.30 மணிக்கு குருபகவானுக்கு, 108 கலச ஆவாகனம், ஜபம், ஜடம், ஹோமம், பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம், 108 கலச அபிகேம் அர்ச்சனை, தீபாராதனை நடக்க உள்ளது. கோவில் நிர்வாகத்தினர், பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.