ெஷர்வுட் ஆண்டர்சன் என்பவர் ஆங்கில எழுத்தாளர். ஏழ்மையில் வாடிய அவர் புத்தகம் ஒன்றை எழுதித் தொடங்கினார். அவரது எழுத்தின் சிறப்பை அறிந்த பதிப்பகத்தினர் தாங்கள் புத்தகம் வெளியிட விரும்புவதாக தெரிவித்தனர். இதற்காக பதிப்பக உரிமையாளர் வாரம் ஒருமுறை ஒரு தொகைக்குரிய காசோலை அனுப்பினார். ஆனால் அவற்றை திருப்பி அனுப்பினார் ஆண்டர்சன். பதிப்பக உரிமையாளருக்கு ஒன்றும் புரியாததால் சந்திக்க வந்தார். ‘‘ஐயா... என் மீது அன்பு கொண்டு காசோலை அனுப்பியதற்கு நன்றி. இந்த பணத்தை நன் பயன்படுத்தியிருந்தால் பசியின்றி வாழலாம் என்பது உண்மையே! ஆனால் பணம் வந்து விட்ட தைரியத்தில் புத்தகத்தின் தரம் குறைந்து விடும். எந்த பணியில் ஈடுபட்டாலும் அதற்குரிய சன்மானத்தை முடித்தபின் பெறுவதே நல்லது. உலகம் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணத்தை தேடி ஓடுகிறது. ஆனால் ஆண்டர்சன் போல சிலர் வித்தியாசமான மனிதர்களாக இருப்பதால் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள். முதலில் கடமை பின்னர் உரிமை என்பதே சரியான அணுகுமுறை. ................... நம்பிக்கையுடன் வாழுங்கள் * நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல. * எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள். * நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை * மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம். * நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம். * கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது தான். * இருபை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான். * நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக. * நேர்மையின் பாதையில் காணப்பட்டால் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும். * கற்புள்ள பெண்மணி புருஷனுக்கு கிரீடம்; ஆனால் அவமானத்தை உண்டாக்குபவள் எலும்புருக்கி நோய். * கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும். * பேசவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள். பொன்மொழிகள்