ஒரு அழகிய பட்டணத்தின் ஓரத்தில் ஏரி இருந்தது. அதில் ஒரு மீ்ன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. துாரத்தில் பறந்த கழுகு அதைக் கண்டதும் ஆவலுடன் இறங்கியது. மீனை பற்றிக் கொண்டு மலைச் சிகரத்திலுள்ள தன் கூட்டிற்கு பறக்கத் தொடங்கியது. உடம்பை வளைத்துப் பார்த்த மீன் விடுவித்துக் கொள்ள முயன்றது. ஆனால் கழுகு கூரிய நகங்களால் இறுகப் பற்றியது. மீன் அதிக பளுவாக இருந்ததால் கழுகு களைப்படைந்தது. மீனின் எடை தன் சக்திக்கு அதிகமாக இருந்ததால் அதை கீழே போட்டு விட முடிவெடுத்தது. ஆனால் கழுகின் கால்நகத்தில் ஆழமாக பதிந்திருந்தால் மீனை கீழே விட முடியவில்லை. கழுகு கீழ் நோக்கி பறக்க ஆரம்பித்தது. வர வர அதன் பறக்கும் வேகம் அதிகரித்தது. தண்ணீருக்குள் மூழ்கி மாண்டது. அதற்குள் மீனும் உயிரை விட்டிருந்தது. இதைப் போலவே பிசாசானவன் பாவத்தை இன்பமாக தோன்றச் செய்து நம்மை வஞ்சக வலையில் விழ வைக்கிறான். பலதரப்பட்ட மக்களை அழித்து நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ‘‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தீமையும் ‘இதெல்லாம் ஒரு பாவமா’ என சாதாரணமாகத் தான் ஆரம்பிக்கும். ஆனால் நாளடைவில் நம்மை இறுகப் பற்றி உயிர்க்கொல்லியாக மாறி விடும். பிசாசானவன் நம் ஆத்துமாவைக் கொல்லவும், அழிக்கவுமே திரிந்து கொண்டிருக்கிறான். ‘தெளிந்த புத்தி உள்ளவராயிருங்கள்; விழித்திருங்கள். எதிராளியான பிசாசானவன் யாரை விழுங்கலாம் என சுற்றித் திரிகிறான்’ அவனிடம் இருந்து விழிப்புடன் விலகி இருங்கள்.