பதிவு செய்த நாள்
28
ஜூலை
2020
12:07
குன்னுார்: நீலகிரியில் வீடுகள் தோறும் கந்த சஷ்டி கவசத்திற்காக வரும், 31ம் தேதி வேல் வடிவில் கோலமிடவும், 7ம் தேதி அகல் விளக்கு ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரி முருக பக்தர்கள் குழு சார்பில், குன்னுாரை சேர்ந்த கார்த்திக் வெளியிட்ட அறிக்கை:உலக மக்கள் வழிபடும் முருக கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் கேவலமாக விமர்சித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சஷ்டி கவசத்துக்கு ஏற்பட்டுள்ள அவதுாறை துடைக்கவும், எச்சரிக்கவும் வரும், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு அவரவர் வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பு, வேல் வடிவ கோலம் இடுவது: ஆக., 7ம் தேதி வேல் வடிவில் அகல் விளக்கு ஏற்றவும் வேண்டும். சஷ்டி திருநாளான, 9ம் தேதி அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன், கைகளில் விளக்குகள் ஏந்தி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய துறவியர், முருக பக்தர் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.