திருப்பரங்குன்றம், :திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. நேற்று காலை சண்முகர் சன்னதியில் உள்ள மூலவர்கள் சக்தி விநாயகர், திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. உற்ஸசர் சுந்தரர் மூலவர் முன் எழுந்தருளச் செய்யப்பட்டார். வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது. கோயில் ஓதுவாரால் ஏழாம் திருமுறை முற்றோதுதல் நடந்தது.உற்ஸவர் சுந்தரர் பல்லக்கில் கொடி கம்பம், நந்தியை மூன்று முறை வலம் சென்று, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதி சென்றடைந்தார். அங்கு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.