ஆடித்திருவிழா : கோயில்களில் அம்மனுக்கு பொங்கல் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2020 01:07
தேவகோட்டை: தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா 21 ந்தேதி துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
வழக்கமாக எட்டாம் நாளன்று புள்ளி பொங்கல் நடைபெறும். கோயில் சார்பில் பொங்கல் வைத்த பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபடுவர். ஊரடங்கால் நேற்று கோயில் பொங்கல் மட்டும் வைக்கப்பட்டது. பொங்கல் வைக்க வந்த சிலர் ஊர் எல்லையில் உள்ள பூர்வீக கோயிலில் பொங்கல் வைத்தனர்.
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள உய்யவந்தம்மன், வீரசேகரஉமையாம்பிகை கோயில்களில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இப்பகுதியில் மிகவும்பிரசித்தி பெற்ற விழாவாகும். தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் வெளியே நின்றவாறே அம்மனை வணங்கி செல்கின்றனர். ஊரடங்கால் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த்திருவிழாவும் நடைபெறவில்லை. தேர்த்திருவிழா விடுபடக் கூடாது என்ற அடிப்படையில், தினமும் குடும்பத்துடன் வந்து பக்தர்கள் கோயிலுக்குவெளியே நின்று சமூக இடைவெளியுடன் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.