சென்னை: சென்னையில் உள்ள சிவாலயங்களில், பிரசித்தி பெற்ற சனிப் பிரதோஷ வழிபாடு, நேரலையாக இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, சென்னை, புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், பக்தர்கள் தரிசன அனுமதி மறுக்கப்பட்டது.இருப்பினும், பிரசித்தி பெற்ற கோவில்களின் நித்திய பூஜைகள், பிரதோஷ வழிபாடு உள்ளிட்டவை, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனிப் பிரதோஷம். திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது, சனிப் பிரதோஷம்.சிவபெருமான், தேவர்களை காப்பாற்ற, ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிப் பிரதோஷம், மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அதன்படி, இன்று நடக்கும் சனிப் பிரதோஷ நிகழ்ச்சிகள், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, http://www.youtube.com/ c/MYLAPOREKAPALEESWARARTEMPLE என்ற இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு, நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.