* உலகமே நலம் பெற வேண்டும் என தினமும் வழிபாடு நடத்துங்கள். * தைரியமே உற்ற துணை. எதையும் சாதிக்கும் வலிமை இதற்கு உண்டு. * உலக விஷயங்களில் விருப்பம் இருக்கும் வரை துன்பம் தொடர்ந்திடும். * இயன்ற உதவிகளை யாருக்கும் மறுப்பது கூடாது. * நல்லவர்களின் மனம் நோகும் விதத்தில் நடக்கக் கூடாது. * தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொன்னாலும் குற்றமாகாது. * சுயநலம் கொண்டவன் எதைச் செய்தாலும் அது பாவம் தான். * ஆபத்து நேரத்தில் கை கொடுப்பதும், இடித்துச் சொல்லி திருத்துபவனே நல்ல நண்பன். * கடவுள் மீது பக்தி செலுத்தவே மனிதர்களாக பூமியில் பிறந்திருக்கிறோம். * நம் பிறப்புக்கு காரணமான பெற்றோரே நம் முதல் தெய்வங்கள். * உடல் மட்டுமின்றி உள்ளமும் துாய்மை பெற விரதமிருங்கள். * விதியின் கடுமை குறைய வழிபாடு உதவும். ஆனால் விதியை யாராலும் வெல்ல முடியாது. * இன்பம் வந்தால் மனிதன், கடவுளை மறந்து ஆணவத்துடன் அலைகிறான். * ஆபத்து நேரத்தில் அதிலிருந்து தப்பிக்க எதைச் செய்தாலும் தவறாகாது. * மனிதன் தனக்குரிய கடமையைச் சரிவரச் செய்வது தர்மம். * கடமை தவறுவது, செய்யாமல் புறக்கணிப்பது, அதை மறப்பது அதர்மம்.