* புயலுக்கு அசையாத பாறை போல புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள். * தன்னை அறிந்தவன் வெற்றி, தோல்வி எது வந்தாலும் தலை வணங்காமல் வாழலாம். * மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி. * ஆசையை ஒழித்தால் தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை. * எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பதே பண்பட்ட மனிதனின் அடையாளம். * தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாகும். * அடக்கம் இன்றி நுாறு ஆண்டுகள் வாழ்வதை விட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு. * நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். * மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும். * உங்களுடைய வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. * பொய்யைத் திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம். * தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து வருந்துவது அறிவுடைமையாகாது. * தீமைகளில் இருந்து விடுவிப்பதோடு, நன்மை அளிக்கும் உண்மையை பரப்ப உறுதி கொள்ளுங்கள். * விழிப்புடன் செயல்படுங்கள். சுமைகளில் இருந்து விடுபடுவீர்கள். * உணர்வுடன் இருப்பதோடு அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். * நல்லவர்கள் இமயமலை போல தொலைவில் இருந்தே காண்போருக்கு மகிழ்ச்சியளிப்பர்.