Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பூணல் ... ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்: முஸ்லிம் வழக்கறிஞருக்கு முதல் அழைப்பு ராமர் கோயில் பூமி பூஜைக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தியில் ராமர் கோவிலுக்காக 28 ஆண்டுகளாக விரதம் இருக்கும் ஆசிரியை

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
04:08

போபால்: மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார். கோவில் கட்டி முடித்த பிறகே விரதத்தை முடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (வயது 82). சமஸ்கிருத ஆசிரியையாக இருந்தார். இவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி 1992ம் ஆண்டு முதல் கடந்த 28 ஆண்டுகளாக பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு விரதம் மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் (ஆக.,05) ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இதே விரதத்தை தொடரப்போவதாகவும் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதற்குள் ராமர் வசித்த பின்னரே சாதாரண உணவை மீண்டும் தொடங்குவதாகவும், ஊர்மிளா சதுர்வேதி கூறினார்.

இதுகுறித்து அவரது மகன் விவேக் கூறியதாவது: வயதானதால் அவரது உடல்நிலை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். எங்கள் கோரிக்கைகளை புறக்கணித்து, அவர் விரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு கோவில் கட்டப்படவில்லை என பலரும் அவரிடம் கடந்த காலத்தில் கூறியிருந்தார்கள், ஆனால் கோவில் பாறைகளால் கட்டப்படும்; ஆனால் அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட உறுதிமொழி எப்போதும் நிறைவேறும், என்றே அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar