Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலில் குளிக்கக் கூடாத நாட்கள் உலக நன்மைக்காக அஸ்வமேத யாகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புத்திரகாமேஷ்டி யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:08

அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி என மூன்று மனைவியர். தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறையை குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். இதன் விளைவாக, யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதை மனைவியரிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவியருக்கு கொடுத்தார்.


சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராமபிரானைப் பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.ராமன் அழகு, நல்ல தோற்றம் மற்றும் அரச அம்சங்களுடனும் பிறந்தார். பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. மிகவும் பண்பானவர். அகில உலகமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களை அவர் கைவிட்டதே இல்லை.மிதிலை மாநகரில் ஜனகன் அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரனின் வில் உடைப்பட்டது. கானகத்தில் பெருமாளின் கால்பட்டு கல் உருகப்பெற்றது. ராமபாணத்தால் தாடகையை வதம் செய்தார். ராமநாம மகிமையால் வேடன் வால்மீகியின் சாபம் நீங்கியது. ராமரின் திருநாம ஜெபத்தால் நமது பாவங்கள் எல்லாம் விலகும். புண்ணியங்கள் பெருகும்.தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார்.அனுமன் உள்ளிட்ட வானரர்களின் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்தார். விபீஷ்ணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரகதோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar