காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2012 11:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் பெருந்திருவிழா, கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை எட்டு மணிக்கு திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. காட்டம்மன் கோயிலுக்கு நேற்று இரவு தேர் சென்று சேர்ந்தது. இன்று காலை 9 மணிக்கு அங்கிருந்து கொப்புடையம்மன் கோயிலுக்கு தேர் திரும்பி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் ராமேஸ்வரி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.