பதிவு செய்த நாள்
09
ஆக
2020
03:08
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே இரு மாவட்ட எல்லையில் உள்ள மிகப்பழமையான அய்யனார் சிலையை, பாதுகாப்பதோடு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால் அரிய தகவல்கள் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொலை தொடர்பு, வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில், பல பகுதியில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒவ்வொரு வகையான சடங்குமுறைகள், தெய்வ வழிபாடுகள் இருந்தன. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் வசித்தவர்கள் அய்யனாரை முக்கிய தெய்வமாக வழிபட்டனர்.
இயற்கைச்சீற்றம் மற்றும் வாழ்வாதாரம் காரணமாக இவர்கள் தங்கள் வசிப்பிடத் தில் இருந்து பலநூறு கி.மீ., தொலைவு கடந்து இன்னொரு பகுதிக்கு புலம் பெயர் ந்து வசிக்கத் தொடங்கினார். அப்போது, தங்கள் வாழ்விடங்களில் தங்களுக்கான தெய்வவழிபாட்டை உருவாக்கினர். அந்த அடிப்படையில் சிவகங்கை, மதுரை, உள் ளிட்ட பகுதியின் முக்கிய தெய்வமான அய்யனார்சிலை திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. மடத்துக்குளம் தாலுகாகடத்தூர் அருகே குருவன்வலசு பகுதியிலுள்ள அய்யனார் சிலை குறித்து பொதுமக்கள் கூறுகையில் " பலநூற்றாண்டுகளாக சிலை இங்கு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் " அய்யனார்அப்பச்சி " என பெயரிட்டு வழிபடுகின்றனர். அமர்ந்தநிலையில் ஒரு காலைமடக்கிய படியும், அய்யனார் உரு வத்தைச் சுற்றி நான்குபெண்கள் உள்ளது போலவும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாலடிஉயரம், மூன்றுஅடி அகலத்தில் உள்ள இந்த சிலையின் காலம் தெரிய வில்லை. ஆண்டுதோறும் மார்கழி மாத ங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழி படுகிறோம். இதர நாட்களில் இந்தபகுதி மக்கள் சூடம், பத்தி கொளுத்தி வைத்தும் எண்ணெய்விளக்கு வைத்தும் வணங்கிச் செல்வார்கள். கோவில் எதுவுமின்றி திறந்த வெளியில் வரலாற்று சிறப்புமிக்க சிலை பாதுகாப்பின்றி உள்ளது. அரசு கவனம் செலுத்தி இதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள் இதை ஆய்வு செய்தால் சிலை அமைக்கப்பட்ட காலம், சிறப்பு கடத்தூர் பகுதியின் வரலாற்று தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளது"என தெரி வித்தனர்.