புதுச்சேரி : ஏம்பலம் முத்து மாரியம்மன் கோவிலில், கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு யாகம் மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1.00 மணிக்கு சமூக இடைவெளியுடன் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கோவிந்தராசு ஆகியோர் செய்திருந்தனர்.