அவிநாசி: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை மாலை, சிறப்பு பூஜை நடக்கிறது. குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நாளை மாலை 6.18 மணிக்கு சஞ்சாரம் செய்கிறார். இதையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை மாலை 5.00 மணிக்கு குருப்பெயர்ச்சி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடக்கிறது. சிவக்குமார சிவாச்சாரியார் கூறுகையில், மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் நாளை பெயர்ச்சியாகிறார். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம், விருச்சிகம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, முல்லைப்பூ, மஞ்சள் வஸ்திரம் சாற்றி பரிகார பூஜை செய்யலாம், என்றார்.