ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில்பா.ஜ., சார்பில் வேல்பூஜை மற்றும் கந்தசஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்திதலைமையில் வேல் பூஜை நடந்தது. ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் சிவா முன்னிலையில் நடந்த பூஜையில் நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். வத்தலக்குண்டில் பா.ஜ.க., சார்பில் கந்த சஷ்டி கவச புத்தம் வீடுகளில் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி துணை தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ரகு முன்னிலையில் புத்தகங்கள் வழங்கினர்.