பதிவு செய்த நாள்
11
ஆக
2020
01:08
போடி,: போடியில் பா.ஜ., சார்பில் கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் சுப்பிரமணியர் கோயில், பெருமாள்கோயில் முன் உட்பட 16 இடங்களில் வேல்கள் பூஜை செய்யப்பட்டு கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. நகரத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜேந்திர குமார் , நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றிய பா. ஜ., சார்பில் சுவர்களில் வேல்படம் ஒட்டி கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.
கெங்குவார்பட்டியில் நிர்வாகி ஜெயராம், மண்டல துணைத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடந்தது. பொம்மிநாயக்கன்பட்டியில் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் நல்லபாண்டி தலைமையில் கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது.
எண்டப்புளியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் சுவர்களில் வேல் வரையப்பட்டது. இளைஞர் அணிப்பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் அறிவழகன் பங்கேற்றனர். ஆண்டிபட்டி, சின்னமனுார், தேவாரம், கம்பம், கூடலுார், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வேல்பூஜை நடத்தி கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது.