ராமநாதபுரம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி சுவாமி பொம்மை விற்பனை ஜோராக நடந்தது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று (ஆக.,11) கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கிருஷ்ணர் பொம்மை வைத்தும், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து, பாதங்களை கோலமிடுவது வழக்கமாகும். இவ்விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் கடைகளில் கிருஷ்ணர், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், ராதைக்கிருஷ்ணன், வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர், தொட்டில் கிருஷ்ணர் ஆகிய பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் விநாயகர்பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.