திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டறியப்பட்டது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி கொந்தகை மணலுார் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. கொந்தகையில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு நடக்கும் அகழாய்வில் 14 முதுமக்கள் தாழிகளும் நான்கு குழந்தைகளின் எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. கொந்தகையை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது. தற்போது ஐந்து அடி நீளமுள்ள மனித எலும்பு கூடு முழுமையாக கிடைத்துள்ளது. தாடை எலும்பு பல் கால் மூட்டு எலும்பு ஆகியவற்றின் செல்களின் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் காலத்தை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.