பதிவு செய்த நாள்
13
ஆக
2020
04:08
ஓசூர்: கொரோனாவால், விநாயகர் சதுர்த்தி விழா நடக்க வாய்ப்பில்லாத நிலையில், சதுர்த்திக்காக தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனையாகாமல் தேங்கி யுள்ளன.
நாடு முழுவதும், ஒவ் வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக, ஓசூர், தேன் கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், ஹிந்து அமைப்புகள், பொது மக்கள் சார்பில், அந்நாளில், 1,000க்கும் மேற்பட்ட விநா யகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இதற்காக, நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத மரவள்ளிக் கிழங்கில் விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படும். விநாயகர் சதுர்த்தியில் பூஜிக்கப்பட்ட சிலைகளை, ஆயிரக்கணக்கான பக்தர் கள் மேள தாளங்கள் முழங்க, பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஊர்வ லமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பர். அப்போது, நகரமே விழாக்கோலம் பூணும். நடப்பாண்டில் வரும், 22ல் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா பரவலால், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டவில்லை. பொது மக்களும், இதுவரை விநாயகர் சிலைகளை வாங்க முன்வரவில்லை. ஓசூர், தேன்கனிக்கோட் டையில், களைகட்டும் விநாயகர் சதுர்த்தி விழா, கொரோனாவால் இந்த ஆண்டு நடக்குமா என சந்தேகமாக உள்ளது. இதனால், சதுர்த்தியை குறிவைத்து தயாரிக்கப் பட்ட விநாயகர் சிலைகள் விற்பனையாகாமல் உள் ளதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.